பேத்தி வயது பெண்ணை சைட் அடித்த ஒய்ஜி மகேந்திரன்: ஆடியோவால் அடுத்த பரபரப்பு
மாணவிகளுக்கு ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் வன்புணர்வு தொல்லை கொடுத்ததால் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி, சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த சர்ச்சையில் பிராமின், நான் பிராமின் அரசியலை புகுத்துகிறார்கள் என்று அப்பள்ளியின் டிரஸ்டியான ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக மதுவந்தி வெளியிட்டுள்ள பதிவில், இப்ப நடந்திருப்பது ஒரு பயங்கரமான, அசிங்கமான நிகழ்வு. பத்மசேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் அங்கு பணிபுரியும் ராஜகோபால் என்கிற ஆசிரியர் பற்றி ஒரு புகார் கொடுத்திருக்கிறார்.
இது கடுமையான குற்றச்சாட்டும் புகாரும் ஆகும். இந்த புகார் பற்றின விவரங்கள் எங்களுக்கும் வந்தது. எனக்கும் என் தந்தை ஒய்.ஜி. மகேந்திராவுக்கும் வந்தது. என் தந்தை ஒய்.ஜி. மகேந்திரா, ஸ்கூல் மேனேஜ்மென்ட் கிடையாது.
அவர் ஒரு டிரஸ்டி. இந்த புகார் வந்த கையோடு இரவு 12 மணிக்கு பள்ளி நிர்வாகத்துக்கு இ மெயில் அனுப்பிட்டார் என் தந்தை.
இதுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற விண்ணப்பத்தையும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், மதுவந்தி பேசிய தொலைபேசி உரையாடல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இந்த விஷயம் தேர்தல் முடிந்த பின்னரே எனக்கு வந்தது. இது எதிர்ப்பார்த்தது தான்.
இந்த மாதிரி கல்வி நிறுவனங்களை டார்க்கெட் பண்ணி, பிராமின் பெண்களை வழிநடத்துகிறார்கள். இது 50 வருஷமா பரப்பிக்கிட்டு தான் இருக்காங்க என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் ஒய்ஜி மகேந்திரன் தனது பேத்தி வயது உள்ள பெண்ணை 2 நிமிடம் சைட் அடித்துள்ளதாக அவரே கூறியுள்ளதும் தற்போது சர்ச்சையினை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவான தகவல்களைக் காணொளியில் காணலாம்.