ரஜினிக்கு இந்த அசிங்கம் தேவையா? கூகுள் போட்டோவை ஆட்டைய போட்ட ஜெயிலர் பர்ஸ்ட் லுக்!
நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.
அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.
Courtesy: Vijay fan.#Jailer #JailerPoster #Rajinikanth #Rajini169 #Nelson pic.twitter.com/R1bxYlbqBe
— Blue Sattai Maran (@tamiltalkies) June 18, 2022
சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்
இந்த நிலையில் தற்போது நெல்சன், ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். ‘தலைவர் 169’ என்று படத்திற்கு பெயர் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் படக்குழு அண்மையில் போஸ்டர் வெளியிட்டு படத்தின் பெயரை அறிவித்தது.
இந்த போஸ்டரை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருக்கும் background கூகுள் போட்டோஸ்ஸில் இருந்து சுடப்பட்டு இருக்கிறது.
இதனை குறிப்பிட்டு பலர் கேலி செய்து வரும் நிலையில் பலர் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
ரஜினிக்கு இது தேவையா?
நடிகர் கமலின் விக்ரம் படம் வசூலில் வேட்டையாடி வரும் நிலையில் நடிகர் ரஜினிக்கு இந்த அவமானம் தேவையா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.