மகள் இல்லாமல் மனைவியுடன் வெளியே வந்த ரஜினி! ஏன் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படங்கள்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து ரஜினியை மிகவும் பாதித்துள்ளது.
இதன் காரணமாக ரஜினி வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருப்பதாக தகவல்கள் வந்தன.
சொந்த வாழ்க்கையில் இருக்கும் சோகத்தால் ரஜினி தன் சினிமா வாழ்க்கையில் தற்போது கவனம் செலுத்தவில்லையாம் எனவே இதனால் ரஜினியின் அடுத்த படம் தாமதம் அடைவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
#Thalaivar latest...!!!
— Rajini Addictor (@AddictorRajini) February 7, 2022
Kings hotel opening ceremony...@rajinikanth with his style....?@soundaryaarajni #Rajinikanth#RajiniAddictor pic.twitter.com/4rAjkW0Gj1
எனவே ரஜினி தற்போது எப்படி இருக்கிறார் என்ற கவலை அவர்களது ரசிகர்களிடம் வெகுவாக உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் அன்புச்செழியன் அவரது இல்லத்திருமண விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினியின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போது ரஜினியுடன் புகைப்படமும் எடுத்துள்ளார் .
அந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து தற்போது ரஜினி பல நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
சென்னையில் ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு ரஜினி வந்துள்ளார். அவருடன் மனைவி லதா மற்றும் இளைய மகள் சௌந்தர்யா உடன் இருந்தனர்.
ஆனால் ஐஸ்வர்யா ரஜினியுடன் வரவில்லை. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வரவில்லை என ரசிகர்கள் சிலர் கருதுகின்றனர்.
இந்நிலையில் தற்போது பல நாட்கள் கழித்து ரஜினியை பொது இடங்களில் பார்த்த அவரது ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.