விஜயை தாறுமாறாக கிழித்து தொங்க விட்ட ராஜேஸ்வரி..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது.
அதற்கு முன்னர் அந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் லியோ பட பாடல் குறித்து ராஜேஸ்வரி ப்ரியா கடுமையாக பேட்டியொன்றில் பேசியுள்ளார்.
அந்த வகையில் அந்த பாடலில் நடிகர் விஜய் அவர்கள் வாயில் சிக்ரெட் வைத்து கொண்டு ஆடுகிறார்.
இது சமூகத்திற்கு தவறான முன்னுதாரணம் என ராஜேஸ்வரி கண்டனம் தெரிவிக்கின்றார்.
ராஜேஸ்வரி ப்ரியாவின் கொந்தளிப்பு
அதில், “ இது போன்ற தவறான முன்னுதாரணங்கள் தான் சமூக சீரழிவிற்கு காரணம். விஜயை யாரும் தளபதி என அழைக்காதீர்கள். அவர் தமிழ் மக்களுக்காக இது வரையில் ஒன்று செய்யவில்லை.
இது போன்ற தவறாக திரைப்படங்களில் காட்டுவதால் தான் இன்று சமூகத்தில் அதிகமான குற்றங்கள் இடம்பெறுகின்றது.” என கடுமையாக நடிகர் விஜயை சாடியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணைவாசிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் கொந்தளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
மேலதிக தகவலுக்கு காணொளி,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |