மரத்தில் இளம்பெண்ணை கட்டி வைத்து அடித்த கும்பல்! பின்னணி என்ன? அதிர்ச்சி வீடியோ
மரத்தில் இளம்பெண்ணை கட்டி வைத்து அடிக்கும் காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் பஸ்ஸ்வாரா பகுதியில் இளம்பெண் ஒருவரையும், இளைஞர் ஒருவரையும் உள்ளூர் மக்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணும் அவரது இளம் நண்பரும் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டனர். திருமணமான பெண், வேறு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுடன் இருந்த காட்சி, கிராம மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் இருவரையும் அழைத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
மரத்தில் கட்டிவைக்கப்பட்ட பின்னர், பெண்ணை கட்டையால் தாக்கியதும், பெண் கதறுவதும் காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
See the culmination of atrocities with a woman in Banswara, #Rajasthan, #priyankagandhi ji
— Saurabh Tiwari (शांडिल्य) (@subhamt356) July 30, 2022
that's it,#SaveOurMissingGirls pic.twitter.com/MvtIdEvAvu