கணவன்- மனைவியா வாழ முடியாதா? சரவணனின் பதிலால் ஷாக்கான சந்தியா- என்ன நடக்கப் போகுதோ?
ஆல்யா மானசா- சித்துவின் நடிப்பில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்றை பெற்ற சீரியல் ராஜா ராணி 2.
இந்தி மொழி தொடரின் தமிழாக்கம் என்றபோதும், அதிரடியான திருப்பங்களால் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
ஐபிஎஸ் கனவுடன் படித்து பட்டம் பெறும் சந்தியாவுக்கு, திடீரென திருமணம் ஆக குடும்பமே எல்லாம் என்றாகிவிட்டது.
கண்டிப்பான மாமியார், பாரம்பரியான குடும்பம் என தன் கனவே கலைந்துவிடும் நிலையில் நிலைகுலைந்து போகிறார் சந்தியா.
இருந்தாலும் புகுந்த வீட்டின் பெருமையையும் காப்பாற்றி தன் லட்சியத்தை சந்தியா எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதே கதைக்கரு.

முதலில் சந்தியாவுக்கு ஆதரவாக இருந்த சரவணன் மனதில் சிறு விரிசல் விழுகிறது, மனைவி ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என அல்லப்படுகிறார்.
இந்த வாரத்தில் கோவிலுக்கு செல்லும் சரவணன்- சந்தியா பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.
பூஜை முடிந்தவுடன் மழையும் வந்துவிட, தவறி விழப்போன சந்தியா, சரவணன் மீது சாய்கிறார்.
ஒருகட்டத்தில் சட்டென விலகிப்போகும் சரவணனிடம் ”மற்ற கணவன்- மனைவியை போல் வாழ முடியாதா? என சந்தியா கேள்வி எழுப்ப, என் அம்மாவின் ஆசைகளை பூர்த்தி செய்ய முடியுமா?

யாருக்காவும் உங்களை மாத்திக்க வேண்டாம் என கண்டிப்புடன் சொல்ல கண்கலங்கி போனாராம் சந்தியா.
இந்த ப்ரொமா காட்சிகள் வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, என்ன நடக்கும் என்பதை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.