சமந்தாவிற்கு கணவர் ராஜ் நிடிமோரு அளித்த பரிசு என்ன தெரியுமா?
நடிகை சமந்தாவின் கணவர் ராஜ் நிதிமோரு சமந்தாவிற்கு அளித்த பரிசு குறித்து இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா கடந்த 1ம் தேதி இயக்குனர் ராஜ் நிதிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவை ஈஷா யோகா மையத்தில் லிங்க பைரவி கோவிலில் நடைபெற்றது.
இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றதுடன், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோரு இயக்கிய பேமிலி மேன் என்ற வெப்சீரிஸில் நடித்தார். இதில் நடிக்கும் போது இருவருக்கும் நட்பு ஆரம்பமாகியது.
தற்போது இருவரும் தம்பதிகளாக மாறியுள்ள நிலையில் ராஜ் நிதிமோரு தனது மனைவி சமந்தாவிற்கு அளித்துள்ள பரிசு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ் நிடிமோரு அளித்த பரிசு
நடிகை சமந்தாவின் தற்போதைய கணவர் ராஜ் நிடிமோருவின் சொத்து சமந்தாவை விட குறைவு என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் ராஜ் நிடிமோருவிற்கு 85 முதல் 89 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகின்றது.
அதுவே சமந்தா தற்போது கூட விளம்பர படங்களில் நடிப்பதற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகின்றார். இவரது சொத்து மதிப்பு 100 முதல் 120 கோடி ஆகும்.
இந்நிலையில் ராஜ் நிடிமோரு தனது மனைவி சமந்தாவிற்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றினை கொடுத்துள்ளாராம். அதாவது ஹைதராபாத்தில் Jubilee Hillsல் மிகப்பெரிய பங்களா ஒன்றினை கொடுத்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |