ஏலியன் வரும் வழி போல திடீரென்று வானத்தில் தோன்றிய வானவில்! மிரள வைத்த இயற்கை அன்னை
சையன்ஸ் ஃபிக்ஷன் படங்களில் ஏலியன் பூமிக்கு வரும் வழி போல சீனாவில் சில தினங்களுக்கு முன்னர் வித்தியசமான முறையில் தோற்றம் அளிக்கக்கூடிய வானவில் உருவாகியிருக்கிறது.
இந்த வானவில்லை பார்த்த உடனேயே மக்கள் வியந்து போயிருக்கிறார்கள்.
இந்த வீடியோ ஆகஸ்ட் 21 அன்று சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள ஹைகோ நகரில் எடுக்கப்பட்டிருக்கிறது.
வியக்க வைத்த ஆராச்சியாளர்கள்
வானத்தில் தோன்றிய இந்த வித்தியாசமான தோற்றத்தை 'scarf cloud' மற்றும் 'pileus' என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.
ஈரப்பதம் மிகுந்த காற்றில் நீர்த்துளிகள் குளிர்ந்து, பனிக்கட்டியாக மாறும் நேரத்தில் அதன் மீது சூரிய ஒளி படும்.
அதாவது, ஒரே நேரத்தில் நீர்த்துளிகள் மற்றும் பனிக்கட்டிகள் மீது சூரிய படும்போது இத்தகைய தோற்றம் உருவாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Rainbow colored scarf cloud over Haikou city in China pic.twitter.com/ewKmQjsiIE
— Sunlit Rain (@Earthlings10m) August 26, 2022
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் படுவைரலாக பரவி வருகிறது.
