Aval sooji idli:1 கப் அவலும், 1 கப் ரவையும் இருந்தாலே போதும்.. பஞ்சு போல இட்லி செய்யலாம்
பொதுவாக காலையுணவாக இட்லி அல்லது தோசை சாப்பிடுவது வழக்கம்.
அப்படியாயின், இட்லி மா இல்லை என சில கவலை வேண்டாம். வீட்டிலுள்ள அவலையும் ரவை மாவையும் வைத்து பஞ்சி போன்று இட்லி செய்யலாம்.
மேலும், இந்த இட்லி டயட்டில் இருப்போருக்கு ஏற்றதாக இருக்கும். வழக்கமாக செய்யும் இட்லியை விட இது மென்மையாக இருப்பதால் வீட்டிலுள்ள குழந்தையும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், அவல் ரவா இட்லி எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* புளித்த தயிர் - 1 கப்
*தண்ணீர் - 1/2 கப் + 1/2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
*ரவை - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* ஆப்பசோடா - 1/4 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
இட்லி தயாரிப்பது எப்படி?
முதலில் அவல், தயிர் இரண்டையும் நன்றாக கலந்து 10-15 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின்னர் ஊற வைத்த அவலை மிக்சர் ஜாரில் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த அவலை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் 1/2 கப் நீரை ஊற்றி கலந்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
தாளிப்புடன் முந்திரி, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அந்த கலவையுடன் துருவிய கேரட்டை சேர்த்து கொள்ளலாம். பின்னர் அதில் கொத்தமல்லியை சேர்த்து கிளறி விட்டு, ரவையை கொட்டி 2 நிமிடம் வறுத்து இறக்கவும்.
ரவை கலவையை அவலுடன் சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஆப்பசோடாவும் சேர்ந்து நன்கு, சுமாராக 10 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
இறுதியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அதில் இந்த மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான மெதுவான அவல் ரவா இட்லி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
