Cinnamon Tea: மாரடைப்பை தடுக்கும் இலவங்கப்பட்டை தேனீர்
இலவங்கப்பட்டை தேநீர் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு வழிகளிலும் நன்மை பயக்கின்றது.இலவங்கப்பட்டை பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும்.
மெக்னீசியம், இரும்பு, புரதம், தாமிரம் போன்ற சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. பல பெரிய நோய்களின் அபாயத்தைக் குறைக்க இது பெரிதும் துணைப்புரிகின்றது என ஆய்வு தகவல்கள் குறிப்ப்பிடுகின்றன.
அந்த வகையில் தினசரி இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
இலவங்கப்பட்டை தேனீரின் மருத்துவ பயன்கள்
இலவங்கப்பட்டையில் ஆக்ஸிஜனேற்ற சக்திகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் காணப்படுகின்றது.
நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடல் எடையைக் குறைத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இலவங்கப்பட்டை தேநீர் முக்கிய பங்கு வகிப்பதுடன், புற்றுநோய் செல்களின் வறர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது. மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் வாய்ந்து.
எடை இழப்பை மேம்படுதத்துவதில் இலவங்கப்பட்டை தேனீர் சிறப்பாக .செய்ல்படுகின்றது.இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், பசியைக் குறைக்கவும் உதவும்.
இலவங்கப்பட்டையில் ட்ரைகிளிசரைடு மற்றும் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்கும் மற்றும் நிலையான குளுக்கோஸ் அளவை ஆதரிக்கும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது தமனிகள் தடுக்கப்படும் அல்லது சேதமடையும் அபாயத்தைக் குறைக்கும். அதனால் மாரமைப்பு அபாயத்தைவும் குறைக்கின்றது.
இலவங்கப்பட்டை தேனீர் இதயத்தைப் பாதுகாக்கவும், இதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கவும் உதவும்.
இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை அதிகம் கொண்டுள்ளது. இவை இரண்டும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த தேனீரை தினசரி பருகுவது தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
இலவங்கப்பட்டை செரிமானத்தை ஊக்குவிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். இலவங்கப்பட்டை தேனீர் பருகுவது செரிமானத்தை எளிதாக்குவதுடன் குமட்டலைக் குறைக்கவும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
