சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள்
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளும் ஐந்து ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சுக்கிரனின் பார்வை
ஆடி மாதம் ஆன்மீகத்திற்கு உகந்த மாதமாகவும், ஜோதிட ரீதியாக சிறப்பு வாய்ந்த மாதமாகவும் இருக்கின்றது. இந்த மாதத்தில் கிரகங்களின் நிலைகளாலும், அவற்றினால் உருவாகும் யோகமும் அனைத்து ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆடி மாதத்தில் கும்ப ராசியிலிருக்கும் ராகுவின் பார்வை சுக்கிரன் மீது விழுந்து சுக்கிரன் பலன் பெறுகின்றார். நவகிரகங்களில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணியாவார்.
சுக்கின் மீது ராகுவின் பார்வை விழுவதால் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை சில ராசியினர் பெறுகின்றனர். அவ்வாறு தொழிலில் முன்னேற்றம், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ரிஷப ராசியினர் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவதுடன், நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் வெற்றியில் முடியும்.
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், எதிர்பாராத பண வரையும் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு குறைந்து புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த ஆடி மாதத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன், வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல செய்தியும் கிடைக்கும்.
சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதுடன், வெளிநாடு செல்ல முயற்சி செய்யபவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். ஆனாலும் எந்தவொரு முதலீடு செய்வதற்கு முன்பு நிதானமாக முடிவெடுப்பது சிறந்தது.

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த காலக்கட்டம் அதிர்ஷ்டமானதாகவும், பணிபுரிபவர்களுக்கு முழு ஆதரவு கிடைப்பதுடன், பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
குடும்பத்தில் சுப நிழ்ச்சிகள் நடக்கும் வாய்புள்ளதுடன், திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கவும் செய்யும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் அதற்கான வாய்ப்பும், நல்ல லாபமும் கிடைக்குமாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த காலக்கட்டத்தில் நிதி நிலைமை வலுவடையுமாம். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
பணப்பிரச்சனை குறைந்து மனநிம்மதி கிடைப்பதுடன், தம்பதிகளுக்குள் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். கலை மற்றும் ஊடக துறையில் உள்ளவர்கள் புதிய உயரத்தினை அடையும் வாய்பபினை பெறுவார்கள். நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியினருக்கு ஆடி மாதத்தில் எதிர்பாராத வளர்ச்சி கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைப்பதுடன், வருமானத்தில் நல்ல உயர்வும் ஏற்படும்.
அதிகமான பணத்தை சேமிக்க முடியுமாம். குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்களால் நிதி ஆதாயம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |