தமிழக அமைச்சர்களுடன் நித்தியானந்தா பிரதநிதிகள்! பதிவால் வெடித்த சர்ச்சை
தமிழக அமைச்சர்களை கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியதாக வெளியான தகவலை மறுத்துள்ளது தலைமை செயலக வட்டாரங்கள்
நித்தியானந்தா பதிவு
கைலாசா எனும் நாட்டில் வாழ்ந்து வருவதாக கூறும் நித்தியானந்தா சமீபத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது.
தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சூழலில் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் நித்தியானந்தா.

அதில், கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் லோகேஷ், ஸ்ரீநாத், வன்னி அரசு ஆகியோரை சந்தித்து ராஜாங்க ரீதியிலான உறவுகள் குறித்து பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இதன் போது United States of Kailasa, kailasa's History புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டதாகவும் அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியானது.
தவறான செய்தி
இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், மறுப்பு தெரிவித்துள்ள தலைமை செயலக வட்டாரங்கள்.
தினமும் மனு கொடுப்பதற்காக ஏராளமான பேர் அமைச்சர்களை சந்திக்கின்றனர், அதுபோல வந்தவர்கள் தான் அவர்களும்.
நித்தியானந்தா சொல்வதை போன்று பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை, அது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
