ராகுவின் பிடியில் இருந்து விடுதலை... இந்த 3 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது!
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. கிரகங்களின் நிலையால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், கிரகங்களின் முக்கியமாக கருதப்படும் ராகு பெயர்ச்சி அடைய உள்ளார். ராகு பகவான் சதய நட்சத்திரத்திற்கு மே 31ம் தேதி அதிகாலை 2.28 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சதயம் நட்சத்திரத்தின் முதல் கட்டத்தில் ராகு பெயர்ச்சி அடைவதானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாத தாக்கங்களை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை கொடுக்கப்போகின்றது.
அப்படி ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

ராகுவின் சதய நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் நீண்ட கால கடின உழைப்புக்கு பலன் கிடைக்கப்போகின்றது.
இவர்களின் பல வருட துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கப்போகின்றது. இந்த ராசியினரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை ஆகிய இரண்டிலுமே அமோக முன்னேற்றம் ஏற்படப்போகின்றது.
இவர்களின் கடன் தொல்லைகளுக்கு ஒட்டுமொத்தமாக முடிவுகட்டும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். இவர்களின் நிதி நிலையில் பாரிய முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்ளுக்கு வாழ்வில் வசந்த காலம் ஆரம்பிக்கப்போகின்றது.
தொழில் ரீதியில் நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கி தொட்டதெல்லாம் வெற்றியாகும் நிலை உருவாகும்.
பணியிடத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். இவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதி நிலவும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
கும்பம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
இவர்களின் பொருளாதார நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த வேலைகள் குறைந்த முயற்ச்சியிலேயே வெற்றிகரமாக நிறைவேறும்.தொழில் விடயத்தில் குடும்பத்தவர்களின் ஒத்துழைப்பு பலமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |