ராகுவின் வக்ரப் பெயர்ச்சி: நவம்பர் 25 முதல் சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்!
rahu transit in capricorn : நவகிரகங்களில் ராகு, கேது ஆகியவை நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இவை பொதுவாக வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களையும் சவால்களையும் ஏற்படுத்தக்கூடிய கிரகங்களாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகின்றன.
ராகு ஒவ்வொரு ராசியிலும் சுமார் 18 மாதங்கள் சஞ்சரித்து, பின்னர் அடுத்த ராசிக்கு இடம் மாறுவார். இந்த ராசி மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

அந்த வகையில், வரும் நவம்பர் 25ஆம் தேதி ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு வக்ர நிலையில் பெயர்ச்சியாக உள்ளார்.
இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான மாற்றங்களையும் நற்பலன்களையும் வழங்கும் எனக் கூறப்படுகிறது.
அதேவேளையில், சில ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் பல்வேறு சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ராகுவின் இந்தப் பெயர்ச்சியால் சவால்களைச் சந்திக்கக்கூடிய ராசிகள் எவை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி கலவையான பலன்களைத் தரும். நண்பர்களுடனான உறவில் விரிசல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
அவர்களின் நம்பிக்கையைப் பெற கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். தொழிலில் பல தடைகளைச் சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் போட்டியாளர்களின் நெருக்கடியும் அதிகரிக்கலாம்.இதனால் நிதி நெருக்கடி ஏற்படுவதுடன், சேமிப்புகளும் கரைய வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி சாதகமற்ற பலன்களை அளிக்கலாம். நிதிப் பிரச்சினைகளை ஓரளவு சமாளித்தாலும், செலவுகளில் கவனம் தேவை.
குடும்பத்தில் சில விரும்பத்தகாத அனுபவங்களும் மனக்கவலைகளும் ஏற்படலாம். தொழிலில் சிறுசிறு தடைகள் உருவாகும். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
எதிர்பார்த்தவற்றைச் செய்ய முடியாத ஏமாற்றமும் ஏற்படலாம். வருமானத்தைவிட செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சிக்கனமாகச் செயல்படுவது அவசியம்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது சோதனைகள் நிறைந்த காலமாக அமையலாம். குறிப்பாக மாணவர்கள் படிப்பில் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதும், நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. வேலை தேடுபவர்கள் மேலும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
வியாபாரிகள் கவனமாகச் செயல்பட வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் இதுவரை காலத்துக்குமான சேமிப்பு சடுதியாக குறைய வாய்ப்பு காணப்படுகின்றது.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி சவால்கள் நிறைந்த காலமாக இருக்கலாம். நிதிப் பிரச்சினைகள் தனிப்பட்ட உறவுகளில் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
உடல்நலத்தில், குறிப்பாக ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதியற்ற சூழல் நிலவுவதால் மனக்கவலை ஏற்படும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் பின்னடைவுகள் ஏற்படலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகி பிரச்சினைகளை அதிகரிக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |