2 நாட்களில் ராகு நட்சத்திர பெயர்ச்சி... பிறக்கும் புத்தாண்டு எந்த ராசிக்கு ஜாக்பட்?
எதிர்வரும் நவம்பர் 23ம் திகதி ராகு நட்சத்திர பெயர்ச்சி இடம்பெறப்போகின்றது. இதனால் மூன்று ராசிகள் 2026 இல் பயன்பெறுவார்கள்.
ராகு நட்சத்திர பெயர்ச்சி
எதிர்வரும் நவம்பர் 23 ஆம் தேதி ராகு தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த சஞ்சாரம், 2026 புத்தாண்டில் பல மாதங்கள் நீடிக்கும் என கூறப்படுகின்றது.
ராகுவின் மறைமுகமான செல்வாக்கு மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். 18 மாதங்களுக்கு ஒரு முறை ராகு மற்றும் கேது பெயர்ச்சி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்.
ராகு கேது இரண்டு கிரகங்களும் ஒன்றாகவே பெயர்ச்சி ஆவார்கள். அதன்படி தற்போதைய பெயர்ச்சி நவம்பர் 23 ஆம் தேதி காலை 10:07 மணிக்கு ராகு தனது சொந்த நட்சத்திரமான சதாபிஷ நட்சத்திரத்தில், அதாவது சதயம் நட்சத்திரத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி புத்தாண்டுக்கு முன் நிகழ்ந்தாலும் இது 2026 இல் சில ராசிகளுக்கு நன்மையை கொடுக்கும் அந்த ராசி யார் என்பதை பார்க்கலாம்.

| மேஷம் | இந்த ராகு பெயர்ச்சி தொழில் ரீதியாக பெரிய வளர்ச்சி, அபரிமிதமான மாற்றங்களை புதிய ஒப்பந்தங்களைக் கொண்டு வரும். வருமானம், லாபம் அதிகரிக்கும். |
| கன்னி | ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி, கன்னி ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். கன்னி ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் அனைத்து நல்ல செயல்களும் நேர்மறையான பலன்களைத் தரும், மேலும் 2026 புத்தாண்டில் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பர்கள். கன்னி ராசிக்காரர்கள் பல ஆதாரங்களில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம், மேலும் பெரிய லாபம் ஈட்டும் வாய்ப்புகள் உள்ளன |
| துலாம் | ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி, துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு பல வகையான நன்மைகளையும் செல்வத்தையும் கொண்டு வரப் போகிறது. இந்த நேரத்தில் துலாம் ராசியினரின் நிதி நிலைமை மேம்படும், உங்கள் முதலீடுகள் அனைத்தும் இப்போது சிறந்த பலன்களைத் தரும். ராகுவின் பெயர்ச்சி துலாம் ராசியினரின் பல ஆசைகளை நிறைவேற்றும், அதிர்ஷ்டம் உங்கள் அருகிலேயே இருக்கும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).