ராகு, கேது பெயர்ச்சி... ஜாக்பாட்டை பெறும் 6 ராசியினர் யார்?
ராகு கேது பெயர்ச்சியினால் சாதகமான வாய்ப்புகளைப் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராகு கேது பெயர்ச்சி
ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாக இருக்கும் ராகு, கேது இரண்டு கிரகங்களின் பெயர்ச்சியும் ஒருவரது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில் டிசம்பர் 5ம் தேதி ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் மாறுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
இப்பெயர்ச்சியானது 2028ம் ஆண்டு ஜுன் மாதம் வரை நீடிக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்த மாற்றத்தினால் வருமானம் வாய்ப்பு, புதிய பொறுப்புகள் இவைகள் அதிகமாக கிடைக்குமாம். அவற்றினை எந்தெந்த ராசியினர் பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு ராகு பத்தாம் இடத்திலும், கேது நான்காம் இடத்திலும் சஞசரிப்பதாக கணிக்கப்படும் நிலையில், வேலை தேடுபவர்களுக்கு புதிய முயற்சிகள் கிடைக்கும்.
வெளிநாட்டு வேலை, தொழில் மாற்றம், புதிய பொறுப்பு இவற்றிற்கு தங்களது முயற்சியினை திட்டமிட்டு செயல்படுத்தலாம். வேலை தேடுபவர்களுக்கு தங்களது புதிய திறமையினால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி பெறுபவர்களுக்கு முயற்சி, சூழல் இவை முக்கியமாகும்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு ராகு ஒன்பதாம் இடத்திலும், கேது மூன்றாம் இடத்திலும் இருக்கின்றது. கல்வி, பயணம், புதிய தொடர்பு இவற்றில் கவனம் செலுத்த வேண்டிய காலமாக இருக்கின்றது.
வெளிநாடு வேலைக்கு செல்ல நினைப்பவர்கள் தங்களது தகுதிகளை வளர்த்துக் கொள்வதுடன், நேர்முக தேர்வுகளில் கவனம் செலுத்தவும் வேண்டும்.
தொழில் செய்பவர்கள் புதிய சந்தைகளை ஆராயவும், வணிக தொடர்புகளை விரிவுபடுத்தவும் முயற்சிக்கவும். தந்தை வழி சொத்து மற்றும் பணவரவு கிடைக்கும் என்று கூறப்பட்டாலும் சற்று சிரமத்தை சந்திப்பீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியில் ராகு ஆறாம் இடத்திலும், கேது பன்னிரண்டாம் இடத்திலும் சஞ்சரிப்பதாக கருதப்படும் நிலையில், போட்டி, கடன் எதிர்ப்புகள் மற்றும் அன்றாடப் பணிகளுடன் தொடர்புபடுத்தப்படுவதால், புதிய சவால்களை எதிர்கொள்ளும் திறமை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வேலை உயர்வு, புதிய பொறுப்பு கிடைத்தாலும், தொழில் செய்பவர்கள் போட்டியாளர்களை சமாளிக்க தங்கள் தரத்தினை மேம்படுத்த வேண்டும்.
தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் சிறந்தது. பங்குச் சந்தை, ஊடக முதலீட்டில் லாபத்தை எதிர்பார்த்து பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு ராகு மூன்றாம் இடத்திலும், கேது ஒன்பதாம் இடத்திலும் இருப்பதாக கூறப்படுகின்றது. புதிய முயற்சி, தொழில் விரிவாக்க, பயணங்கள் இவற்றில் ஆர்வம் அதிகரிக்கலாம்.

மகரம்
மகர ராசியினருக்கு ராகு முதல் இடத்திலும், கேது ஏழாம் இடத்திலும் இருந்து வரும் நிலையில், தனிப்பட்ட இலக்குகள், வேலை பொறுப்பு மற்றும் கூட்டு தொழிலில் கவனம் தேவை.

மீனம்
மீன ராசியில் ராகு பதினோறாம் இடத்திலும், கேது ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றது. இதனால் வாய்ப்பு, புதிய தொடர்பு, நீண்ட கால இலக்கு இவற்றில் நம்பிக்கையுடன் முயற்சி செய்யவும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |