குரு பகவானின் நட்சத்திர மாற்றம்: நஷ்டங்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன.அதன் தாக்கமானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும்.
நவகிரகங்களில் தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான், ஞானம், தர்மம், செல்வம், குழந்தை பாக்கியம் மற்றும் வளர்ச்சியைக் குறிக்கிறார்.

அந்த வகையில், 2026 அக்டோபர் 8ஆம் தேதி குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நுழைகிறார். இந்த மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
குறிப்பாக, சில ராசிக்காரர்கள் நிதி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சவால்களையும் பின்னடைவுகளையும் சந்திக்க நேரிடடும் என ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி குரு பகவானின் இந்த நட்சத்திர மாற்றத்தால் பாதிப்புகளையும் நஷ்டங்களையும் சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் நுழைவதால் பணியிடத்தில் ஏற்றத்தாழ்வுகள், சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்புள்ளது.
பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகள் புதிய தொழில் அல்லது பெரிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.நிதி இழப்புகளைத் தவிர்க்க, மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நட்சத்திர மாற்றத்தால் நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சவால்கள் ஏற்படலாம்.
எதிர்பாராத செலவுகள் நிதி நெருக்கடியை உருவாக்கக்கூடும். பணியிடத்தில் போட்டிகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவும்.
அதிக ரிஸ்க் கொண்ட முதலீடுகளை அவசரப்பட்டு மேற்கொள்ள வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அமைதியைக் கடைப்பிடிக்கவும். முக்கியத் திட்டங்களை மற்றவர்களிடம் பகிர்வதையும் தவிர்ப்பது நல்லது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நட்சத்திர மாற்றத்தால் குடும்பப் பொறுப்புகளும் அதிகரிக்கும் செலவுகளும் நிதி நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் பணியிடத்தில் சவால்களையும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காத சூழலையும் சந்திக்க நேரிடலாம்.
உடல்நலனில் கவனம் செலுத்தி, சீரான உணவு மற்றும் போதுமான ஓய்வைப் பின்பற்றவும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் திருமண உறவில் விரிசல்கள் அல்லது பிரிவையும் ஏற்படுத்தும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |