ஒரே நாளில் ராகு கேது பெயர்ச்சி! அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் யார் யார்னு தெரியுமா?
ஜோதிடத்தில் ராகு, கேது இரண்டு கிரகங்கள் ஒரே நளில் நட்சத்திரத்தினை மாற்றுவதால், அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராகு மற்றும் கேது
ஜோதிடத்தில் ராகு, கேது இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்களாக அறியப்படும் நிலையில், இவற்றின் திடீர் மாற்றங்கள் பெரும்பாலான நேரங்களில் அசுப பலன்களை தருவதாகவே கூறப்படுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சுப பலன்களையும் கொடுக்கின்றது. அந்த வகையில் வரும் 29ம் தேதி கேது மக நட்சத்தரத்திலும், ராகு சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும் சஞ்சரிக்க உள்ளது.
இதன் காரணமாக சுப பலன்களைப் பெறும் நான்கு ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்
ராகு மற்றும் கேது இரு கிரகங்களும் ஒரே நேரத்தில் நட்சத்திரத்தினை மாற்றுவதால், மேஷ ராசிக்கு நன்மைகள் ஏற்படுகின்றது. செலவுகள் குறைந்து எதிர்பாராத திடீர் பணவரவு ஏற்படும்.
ஆரோக்கிய பிரச்சனை நீங்குவதுடன், உங்களது பேச்சு அனைவரையும் கவருமாம். திடீர் பயணங்களால் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. மேலும் பணி செய்யும் இடத்தில் புதிய பொறுப்பு, மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும்.

மிதுனம்
ராகு மற்றும் கேதுவின் நட்சத்திர மாற்றத்தினால் மிதுன ராசியினருக்கு சிறப்பான பலன் கிடைக்குமாம். இந்த மாத இறுதிக்குள் உங்களது நிதி நிலை உயர்வதுடன், கடன் பிரச்சனையும் குறையுமாம்.
இந்த காலத்தில் சொத்துக்கள் வாங்கவும், விற்கவும் செய்யலாம். நிலுவையில் இருக்கும் வழக்குகள் வெற்றி கிடைக்கும். வேலைகள் எதுவும் தடை இல்லாமல் செல்லும். வீட்டில் கருத்துவேறுபாடுகள் இல்லாமல், தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு ராகு மற்றும் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியானது சாதாகமான சூழலை அளிப்பதுடன், தொழிலில் உள்ள மந்த நிலையும் விலகும். எதிரிகளை எளிதாக வெல்லும் நிலை ஏற்படும்.
புதிய வருமானத்திற்கு வழி கிடைப்பதுடன், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படுகின்றது. சேமிப்பு மற்றும் முதலீடுகளில் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள்.

மீனம்
ராகு கேது பெயர்ச்சியின் காரணமாக மீன ராசியினருக்கு செல்வம் பெருகுவதுடன், புதிய வழிகளில் பணம் கிடைப்பதற்கான வழியும் கிடைக்கும். செலவுகள் குறைந்து கடன் பிரச்சனை தீரும். வங்கி இருப்பும் உயரும்.
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கவும், வெளிநாடு செல்வததற்கு வாய்ப்பும் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க புதிய வழியும் கிடைக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |