ராகு, கேது நட்சத்திர மாற்றம்.... 4 ராசியினர் வாழ்க்கையில் இனி அதிர்ஷ்டம் தான்
ராகு, கேது நட்சத்திர மாற்றத்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெற இருக்கும் ராசியினரை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ராகு, கேது நட்சத்திர மாற்றம்
நவகிரகங்களில் மிகவும் முக்கிய கிரகங்களாக ராகு மற்றும் கேதி கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு அசைவுகளும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த கூடும்.
ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் தற்போது பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், இவ்விரு கிரகங்களும் ஒரே நாளில் தங்களின் நட்சத்திர மாற்ற இருக்கின்றனர். இந்த நட்சத்திர பெயர்ச்சி இம்மாதம் இறுதியில் அதாவது சரியாக மார்ச் 29 ஆம் தேதி நடக்கிறது.
ராகு சதயம் நட்சத்திரத்திற்கும் கேது மகம் நட்சத்திரத்திற்கும் செல்ல உள்ளனர். இவ்விரு கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மட்டும் அதிக பலன்களை வழங்க இருக்கிறது.
மேஷம்
ராகு மற்றும் கேதுவின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வழங்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் பண வரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மிதுனம்
ராகு மற்றும் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்க இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் கடன் பிரச்சனை தீரும். நிதி நிலைமை வலுப்பெறும். வாழ்க்கை துணையுடனான புரிதல் அதிகம் ஆகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
ராகு மற்றும் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. தொழில் தொடர்பான பிரச்சனை தீர்ந்து நல்ல லாபம் பெறக்கூடும். வணிகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். மேலும், பணத்தை சேமிக்க முடியும்.

மீனம்
ராகு மற்றும் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிதி நிலையை வலுப்பெற செய்கிறது. வங்கி இருப்பு அதிகமாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிநாட்டிற்கு பயணிக்கும் வாய்ப்பு வரு. புது வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |