ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது!
ஜோதிடத்தில் நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு, ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்கி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். ராகுவின் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது ராகு கும்ப ராசியில், அவிட்டம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். செவ்வாய் அதிபதியாகக் கொண்ட அவிட்டம் நட்சத்திரம் செல்வம், செழிப்பு, வெற்றி ஆகியவற்றைக் குறிக்கும் மங்களகரமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது.

அவிட்டம் நட்சத்திரத்தில் ராகுவின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் தரும் என ஜோதிடத்தில் ரீதியில் கணிக்கப்பட்டுள்ளது.
ராகு இந்நட்சத்திரத்தில் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வரை இருப்பதால், அதுவரை சில ராசிக்காரர்கள் தங்கள் முயற்சிகளில் நல்ல வெற்றியைக் காண வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்படி அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகுவால் 2027 ஏப்ரல் வரை எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் மிதுன ராசிக்காரர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் மாபெரும் வெற்றியைப் பெறும் வாய்ப்புள்ளது.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.
நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை சிறப்பாக இருக்கப் போகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் வாய்ப்புள்ளது.
இந்த முயற்சி நல்ல பலனைத் தரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும்.
புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால், எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது.
கும்பம்

அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை பொற்காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள்.
நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் திறமைக்கேற்ற நல்ல பலனைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகள் வழங்கும் புதிய பொறுப்புகள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |