குரு–செவ்வாய் சேர்க்கை: இந்த ராசிகளின் செல்வம் பலமடங்காக பெருகும்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்றுதொட்டு நம்பப்படுகிறது.
அந்தவகையில், தைரியம், வீரம், வலிமை, துணிச்சலின் காரணியாகவும், கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுபவர் செவ்வாய். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான இவர், ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குவார்.

தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் செவ்வாய், செப்டம்பர் 18ஆம் தேதி சந்திரனின் கடக ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார். கடக ராசி செவ்வாய் நீச்சமடையும் ராசியாகும்.
எனினும், இங்கு குரு பகவான் பயணித்து வருவதால் செவ்வாயின் நீச்ச விளைவு குறையும்.மேலும், குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை ஏற்படுவதால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படக்கூடும்.
குறிப்பாக, சில ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவதுடன், தொழில், வியாபாரம் மற்றும் வேலை ஆகியவற்றிலும் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.
அப்படி செவ்வாய் கடக ராசிக்குள் செல்வதால் உச்சகட்ட நிதி நன்மைகள் அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். அதே நேரத்தில் குரு பகவானுடனும் இணைந்து பயணிக்கவுள்ளார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பண விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். நீண்ட காலமாக மேற்கொண்ட கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
முடிக்க முடியாமல் இருந்த பல வேலைகளையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். பல்வேறு வழிகளில் இருந்து பண வரவு கிடைக்கலாம். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன் கடன் பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 12-வது வீட்டிற்கு செவ்வாய் சென்று, குரு பகவானுடன் இணைந்து பயணிக்கவுள்ளார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமாக அமையும்.
வேலை மாற்றம் குறித்து யோசித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம். மேலும், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம்

துலாம் ராசியின் 10-வது வீட்டிற்கு செவ்வாய் சென்று, குரு பகவானுடன் இணைந்து பயணிக்கவுள்ளார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறப்பானதாக அமையும்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு வீடு தேடி வரும்.
பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. வியாபாரிகள் ஏற்கனவே செய்த முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |