ராகுவின் மாற்றம்: 4 ராசிகளுக்கு உச்சத்தை தொடும் பேரதிர்ஷ்டம்
ஜோதிடத்தில் முக்கியமாக கருதப்படும் ராகு கிரகத்தினை சில இடங்களில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகின்றது. 18 மாதங்களுக்கு பின்பு மற்றொரு ராசிக்கு மாறப்போவதால் எந்தெந்த ராசிகளின் வாழ்க்கையை மாற்றப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதம் 27ம் தேதி ராகு கிரகமானது மேஷ ராசிக்கும் மாறவிருக்கும் நிலையில், இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். முக்கியமாக 4 ராசிகளுக்கு மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.
மிதுனம்:
ராகுவின் சஞ்சாரத்தினால் மிதுன ராசிக்காரர்கள் மகத்தான பலனை பெறுவதுடன், நிர்வாகப் பணி, வணிகம், வியாபாரம், பங்குச்சந்தை இவற்றில் நல்ல லாபத்தினை பெறலாம்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சாதகமாக அமையும். இந்த நேரத்தில், நிதி நிலைமை மேம்படும். ராகு பெயர்ச்சி காலத்தில் நல்ல பணம் சம்பாதிக்க முடியும். மேலும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். இது வியாபாரத்தில் லாபத்தின் அடையாளம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். பயணத்தின் போது பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். ஒரு புதிய தொழிலைத் தொடங்கலாம். பங்குச்சந்தையிலிருந்து திடீர் பண ஆதாயத்திற்கான அறிகுறி உள்ளது. மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் நன்மைகளைத் தரும். பயணத்தின் போது நிதி நிலை மேம்படும். மேலும், வியாபாரத்தில் முதலீடு செய்த பலன் கிடைக்கும். டெபாசிட் மூலதனம் அதிகரிக்கும். இது தவிர உத்தியோகத்தில் திடீர் பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நன்மை தரும்.