ஏ.ஆர்.ரகுமானுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் வீடு திரும்பினார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலை 7.30 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்திருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரகுமான் தற்போது ரம்ஜான் நோன்பை கடைப்பிடித்துக்கொண்டே அவரது இசையமைப்பு வேலைகளையும் செய்து வருவதால், சோர்வடைந்துள்ளார்.
அவர் லண்டலில் இருந்து இன்று காலை தான் சென்னைக்கு திருமிபியிருக்கின்றார்.இந்நிலையில் உடம்பில் நீர்ச்சத்து குறைந்தமை காரணமாகவே அவர் மிகவும் சோர்வடைந்துவிட்டாராம்.
ரகுமானுக்கு சில வழக்கமான பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். லண்டனில் அதிக வேலை இருந்ததாலும், கூடவே நோன்பு இருந்ததாலும் அவர் மிகவும் சோர்வடைந்துவிட்டார்.
தற்போது பரிசோதனைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். என்ற தகவலை அப்பல்லோ மருத்துவமனையே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

