ரசிகையின் பெயரை மகளுக்கு வைத்த பிரபலம்- அப்படி என்ன தொடர்பு.. அப்பட்டமான உண்மை!
கோலிவுட்டில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்த நடிகர் ரஹ்மான் அவரின் குழந்தைக்கு ஒரு ரசிகையின் பெயரை தான் வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரஹ்மான்
தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரஹ்மான். தமிழ் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு என சினிமாவில் ஒரு வலம் வந்தார்.
காலங்கள் செல்ல ரஹ்மானின் மார்க்கட் குறைய ஆரம்பித்தது. தற்போது முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், “ மதுராந்தகன்” என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் முகத்தை பதிய வைத்திருப்பார்.
இந்த நிலையில், ஏ. ஆர் ரஹ்மான் மனைவியின் தங்கையை திருமணம் ரஹ்மான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.. நீண்ட நாட்களுக்கு பின்னர் இருவரும் ஒன்றாக இணைந்து பேட்டி கொடுத்துள்ளார்கள். அதில் அவர்களின் வாழ்க்கையில் நடந்த பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
குழந்தைக்கு ரசிகை பெயரா?
அந்த வகையில், திரைப்படங்களில் பிஸியாக இருந்த காலங்களில் ரஹ்மானின் தீவிர ரசிகை ஒருவரை இலங்கையில் பார்த்துள்ளார்.
அவரின் வீடு முழுவதும் ரஹ்மானின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் ரஹ்மான் இலங்கை செல்லும் போது அவர் திருமணம் செய்து விட்டாராம்.
இந்த செய்தி கேள்விப்பட்ட ரசிகை ரஹ்மானை பார்த்து பேசவே இல்லையாம். அவரின் ஞாபகமாக ரசிகையின் பெயரை தான் முதல் பெண் குழந்தைக்கு வைத்துள்ளார்களாம்.
அத்துடன் ரஹ்மான் ஞாபகமாக ரசிகையின் ஆண் குழந்தைக்கு ரஹ்மான் என்று தான் பெயர் வைத்துள்ளாராம்.
இந்த செய்தியை மனைவியை அருகில் வைத்து கொண்டு தான் புன்னகையுடன் ரஹ்மான் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி கேட்ட ரசிகர்கள், “ ஒரு ரசிகைக்காக பிரபலங்கள் இவ்வளவு செய்வார்களா?” என அதிர்ச்சியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |