விஜயின் குட்டிஸ்டோரியை ரஜினி பக்கம் சாடிய ப்ளூ சட்டை மாறன்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
ப்ளூ சட்டை மாறன் லியோ வெற்றி விழாவில் விஜய் பேசிய விடயங்களை ரஜினி பக்கம் சாடியுள்ளார்.
லியோ
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாத பல வெற்றிகளின் சொந்தகாரர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் திகதி வெளியாகி நினைத்து பார்க்காத முடியாத வெற்றியை கொடுத்துள்ளது.
இதற்கு ஒரு வெற்றி நடத்த வேண்டும் என நினைத்த குழாம், நேற்றைய தினம் விழாவை பிரபலங்களுடன் கொண்டாடியுள்ளது.
இந்த விழாவில், விஜய், த்ரிஷா, லோகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தரமாக செய்த ப்ளூ சட்டை மாறன்
இந்த நிலையில், லியோ வெற்றி விழாவில் இறுதியாக பேசிய விஜய், தனக்கே உரிய பாணியில் குட்டி ஸ்டோரி சொல்லி மாஸ் காட்டினார்.
இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "பருந்தின் டோப்பா கிழிக்கப்பட்டது" என ரஜினியை பங்கமாக கலாய்த்துள்ளார்.
அந்த வகையில் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காகம், பருந்து என தனது சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு வைப் கொடுத்திருந்தார்.
இதனை குற்றி காட்டும் விதமாக விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியில் ரஜினியை மறைமுகமாக அட்டாக்காக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகின்றது.
இதனை கலாய்த்து ப்ளு சட்டை மாறன் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்டார் நடிகர்கள் இருவரையும் போட்டி போட்டு கலாய்த்து வருகின்றனர்.
பருந்தின் டோப்பா கிழிக்கப்பட்டது pic.twitter.com/TzddIj9zRf
— Blue Sattai Maran (@tamiltalkies) November 1, 2023