1 கப் ராகி மா, 1 கைபிடி முருங்கை கீரையை வைத்து அடை செய்வது எப்படி?
பொதுவாக காலையில் எழுந்தவுடன் என்ன உணவு செய்வது என பலரும் யோசித்து கொண்டிருப்பார்கள்.
அப்படியானவர்கள் காலையில் 1 கப் ராகி மா, 1 கைபிடி முருங்கை கீரை இருந்தாலே போதும், சூப்பராக காலையுணவு சாப்பிடலாம்.
அந்த வகையில், காலையுணவாக சாப்பிடக்கூடிய அடை எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* அவல் - 1/2 கப்
* ராகு மாவு - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* முருங்கைக்கீரை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* வாழை இலை
* எண்ணெய் - தேவையான அளவு
அடை எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் அவலை எடுத்து நீர் ஊற்றி நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
5 நிமிடயங்களுக்கு பின்னர் அவலை கைகளால் நன்கு பிசைந்து அதனுடன் ராகி மா, வெங்காயம், கேரட், கைபிடி முருங்கை கீரை, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து எடுக்கவும்.
அதன் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் தெளித்து, மென்மையான அடை மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி, அடை போன்று தட்டி எடுக்கவும்.
இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அடையை போட்டு எண்ணெய் ஊற்றி 10 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். முன்னும் பின்னும் வேக வைத்துக் எடுத்துக் கொண்டால், சுவையான ராகி முருங்கைக்கீரை அடை தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
