எடையை குறைக்கும் கேப்பைக் கூழ்! இந்த ஒரு பொருளை கலந்து செய்யுங்க
கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினை வராமல் தடுக்கும்.
எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு - 200 கிராம்
- குதிரைவாலி அரிசி - 50 கிராம்
- தயிர் - கால் கப்
- சின்ன வெங்காயம் - தேவையான அளவு
- உப்பு - சுவைக்கு
செய்முறை
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்தைய நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும்.

நன்றாகப் புளித்துவிடும். குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும்.
தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் வரும் போது இறக்கி விடவும்.

பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.