ஆரோக்கியத்தை தாறுமாறாக கொடுக்கும் ராகி அடை! 5 நிமிடத்தில் தயார்
பொதுவாக காலை உணவில் அதிகமான ஊட்டச்சத்து இருப்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் சோர்வு ஏற்படாமல் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
அந்த வகையில் கேள்வரகு மற்றும் முருங்கை கீரை அடை எவ்வாறு செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
வெள்ளை அவல் - 1/2 கப்
வெங்காயம் - 1
சீரகம் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1 துருவியது
முருங்கைக்கீரை - கையளவு
புதினா-கையளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெள்ளை அவலை தண்ணீரில் 2 அல்லது 3 முறை அலசி விட்டு, பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய்,புதினா ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அலசி வைத்துள்ள அவலை சாஃப்ட்டாக பிசைந்து அதில் ராகி மாவு சேர்த்து, பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, துருவிய கேரட், சீரகம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தற்போது மாவை அடை பதத்திற்கு தயார் செய்த பின்பு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்பு, எண்ணெய் தடவிய வாழை இலையில் தட்டையாக தட்டி, அடுப்பில் 1 நாண்ஸ்டிக் தவா வைத்து சூடான பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து, தட்டிய அடையை போட்டு, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வேக வைத்து மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுத்தால் சத்தான ராகி முருங்கைக்கீரை அடை ரெடி!
