சர்க்கரை நோயாளர்கள் விரும்பி சாப்பிடும் கேழ்வரகு கேக் செய்ய தெரியுமா? ஈஸியான ரெசிபி இதோ!
பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்திற்கு சுவையான டீயுடன் ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்து கொள்வார்கள்.
அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள தானியங்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம்.
சிறுதானிய கேக்குகளில் ஒன்றான கேழ்வரகு கேக் செய்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.
அத்துடன் சர்க்கரை நோயாளர்கள் இதனை காலையுணவாக கூட எடுத்து கொள்ளலாம்.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் ஒரு கிளாஸ் இஞ்சி டீ குடித்தால் போதுமாம்! எத்தனை கிராம் சேர்க்கணும் தெரியுமா?
இதன்படி, கேழ்வரகு கேக் எப்படி இலகுவாக செய்யலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு- 100 கிராம்
- கிரீம்- 100 கிராம்
- பேக்கிங் பவுடர்- 1/4 டீஸ்பூன்
- கொக்கோ பவுடர்- ஒரு ஸ்பூன்
- சர்க்கரை- 100 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- முட்டை- 2
- பால்- 20 மில்லி லிட்டர்
- வனிலா எசன்ஸ்- 2 சொட்டு
கேக் செய்முறை
முதலில் வெள்ளை கருவுடன் சர்க்கரை தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அதே கலவையுடன் பால், முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
கலந்து கொண்டு இருக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக ராகி மாவு, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து நமக்கு கேக் என்ன வடிவில் வேண்டுமோ அந்த வடிவில் கேக் மோல்டின் உள்ளே பட்டர் அல்லது நெய் தடவி கேக் கலவையை அதில் ஊற்ற வேண்டும்.
ஊற்றி சரியாக ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
கேக் ஆறிய பின்னர் தான் நன்றாக இருக்கும். ஆகவே 10 நிமிடங்கள் வரை குளிர வைக்க வேண்டும். தற்போது சுவையான கேழ்வரகு கேக் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |