20 வருடங்களாக உணவு கொடுத்த ராகவா லாரன்ஸ்! வளர்ப்பு பிள்ளைகளின் நெகிழ்ச்சி செயல்
20 வருடங்களாக தங்களின் உணவு மற்றும் கல்வி செலவுகளை பார்த்துக்கொண்ட ராகவா லாரன்ஸூக்கு அவரின் வளப்பு பிள்ளைகள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் ட்ரீட் கொடுத்து தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராகவா லாரன்ஸ்
தன்னுடைய தனித்துவமான டான்ஸ் அசைவுகளால் அமர்க்களம் படத்தில் அறிமுகமானவர் தான் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் நடன கலைஞராக இருந்து தனது உழைப்பாலும் திறமையாளும் மட்டுமே டான்ஸ் மாஸ்டராக உயர்ந்தார். 'முனி' படத்தை முதன்முதலாக டைரக்ட் செய்ததுடன், அதில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தார்.
காஞ்சனா, முனி வெற்றியையடுத்து, பேய், அமானுஷ்ய படங்களிலேயே முழு கவனத்தை செலுத்தினார்.
அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மட்டுமல்லாது குழந்தைகளின் மத்தியிலும் அமோக வரவேற்று இருந்தது.
இதையடுத்து டான்ஸ் மாஸ்டர், நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், என அத்தனை துறைகளிலும் வெற்றி கண்ட இவர், தான் தனது தொழில் என அதை மட்டும் கவனித்துக்கொண்டு மற்றவர்களை போல் சுயநலமாக இல்லாமல், ஏராளமான சமூக பணிகளிலும் ஈடுப்பட்டு வருகின்றார்.
'லாரன்ஸ் அறக்கட்டளை' மூலம் சமூக பணிகளை மேற்கொண்டு வரும் இவர், மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ செலவுகளை வழங்குதல், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றார்.
மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில், அவர் தனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 20 வருடங்களாக தங்களின் உணவு மற்றும் கல்வி செலவுகளை பார்த்துக்கொண்ட ராகவா லாரன்ஸூக்கு அவரின் வளர்ப்பு பிள்ளைகள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் ட்ரீட் கொடுத்துள்ளார்கள்.
அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராகவா லாரன்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.