சப்பாத்திக்கு அருமையான முள்ளங்கி சப்ஜி
எல்லா காய்கறிகளுமே சத்தானவைதான். அதிலும் முள்ளங்கி வித்தியாமான சுவையுடையது. வெறுமனே முள்ளங்கியில் குழம்பு மாத்திரம்தான் செய்திருக்கின்றோம் என்று கூறுபவர்களுக்கு இந்த குறிப்பு மிகுந்த உதவிகரமாக இருக்கும்.
இனி சப்பாத்தி, தோசைக்கு அருமையான முள்ளங்கி சப்ஜி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 1 கப்(பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடிதாக நறுக்கியது)
ஓமம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஓமத்தை போட்டு பொரிய விடவும்.
பின்னர் அதில் பெருங்காயப் பொடி, பச்சை மிளகாய் என்பவற்றை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் நறுக்கிய முள்ளங்கியை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்நேரத்தில் முள்ளங்கியிலிருந்து சாறு வெளியேறும்.
அப்போது வற்றும்வரை நன்றாக வதக்கிவிட்டு, வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.