பிரெஞ்சு மொழியில் களமிறங்கும் ராதிகா சரத்குமார்: வைரல் புகைப்படங்கள்
தென்னிந்திய திரையுலகில் 1980 முதல் 1995-ஆம் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக அறியப்பட்ட நடிகை ராதிகா.
கடந்த 1978 ஆம் ஆண்டு மூத்த இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கிழக்கே போகும் ரயில்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர் அன்று தொடங்கி இன்று வரை சுமார் 45 ஆண்டுகளாக பல நூறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
ராதிகா சரத்குமார்
இறுதியாக தமிழில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் .
திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் 1991-ஆம் ஆண்டு பெண் என்ற தொடரில் நடித்து சின்னத்திரையில் கால்பதித்தார்.
தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு சித்தி என்னும் மெகாத்தொடர் சூப்பர் ஹிட் ஆனது.
பிரெஞ்சு மொழியில்...
இந்திய மொழிகள் பலவற்றுள் நடித்து வரும் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள், தற்பொழுது முதல் முறையாக பிரெஞ்சு மொழியில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
தற்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளுக்காக பிரான்ஸ் சென்றுள்ள அவர், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க தன்னை ஊக்குவித்த தனது கணவர் சரத்குமார் அவர்களுக்கும் தனது மகள் மிதுன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |