ராதிகா நடித்த சித்தி சீரியலை ரீ க்ரியேட் செய்த மகள்: அச்சு அசல் அவரைப் போலவே மாறிய தருணம்
சித்தி சீரியலில் நடித்த ராதிகாவைப் போல மாறிய காட்சி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சித்தி சீரியல்
பொதுவாகவே இல்லத்தரசிகளுக்கு வெள்ளித்திரையை விட சின்னத்திரை சீரியல்களை அதிகம் விரும்பி பார்ப்பார்கள்.
அதில் 90களில் அதிகம் பிரபலமான சீரியல் தான் ராதிகா சரத்குமார் நடித்த மெகா சீரியல் தான் சித்தி. இந்த சீரியலில் ராதிகா சரத்குமார், சிவகுமார், யுவராணி, நீனா, தீபா வெங்கட், பூவிலங்கு மோகன், விஜய் ஆதிராஜ், அஜய் ரத்னம், ரியாஸ் கான் என ஒரு பட்டாளமே நடித்திருந்தார்கள்.
சித்தி சீரியல் 1999ஆம் ஆண்டு ஆரம்பித்து 2001ஆம் ஆண்டு வரை ஓடியது.
ரீ கிரியேட் செய்த மகள்
இந்நிலையில், சித்தி சீரியலில் அனைவரும் விரும்பி கேட்ட ஒரு பாடல் தான் கண்ணின் மணி பாடல் இந்தப் பாடலை தற்போது ஞாபகம் வைத்து அவரது மகள் ரீ கிரியேட் செய்திருக்கிறார்.
அதில் ஆரஞ்சு கலர் பட்டுப்புடவையணித்து தனது அம்மா ராதிகா போல பொட்டு வைத்து அப்படியே மாறியிருக்கிறார். இதனை அப்படியே வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட அது தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |