இரண்டு மாதத்தில் அனைத்தையும் இழந்துவிட்டேன்: சித்தி 2, காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகைக்கு நடந்தது என்ன?
சித்தி 2, காற்றுக்கென்ன வேலி என்ற தொடர்களில் நடித்து வந்த வீணா வெங்கடேஷ் இன்ஸ்டாகிராமில் வருத்தத்துடன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பாமர மக்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் ஆட்டம் காண வைத்துள்ளது.
முழுவதும் கட்டுக்குள் வராத நிலையில் ஆங்காங்கே இந்த தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பிரபல சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை வீணா வெங்கடேஷ் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குறித்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்.
இதுகுறித்து மிகவும் வருத்தத்துடன் காணொளி ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வெறும் 2 மாதத்தில் அனைத்தையும் இழந்தவிட்டதாகவும், யாருக்கும் இந்த பாதிப்பு வரக்கூடாது என்று அவர் அனுப்பிய விரிவான காணொளி இதோ...