ராதிகா மற்றும் சரத்குமாரின் சொத்து மதிப்பு என்ன? அரசுக்கு இத்தனை கோடி பாக்கியா?
நடிகை ராதிகா மற்றும் அவரது கணவரும் நடிகருமான சரத்குமார், இவர்களின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ராதிகா மற்றும் சரத்குமார்
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவரான ராதிகா மற்றும் சரத்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ராதிகா அரசியலில் பல வருடங்களான இருந்து வரும் நிலையில், தற்போது வரும் லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகின்றார்.
சரத்குமாரும் நடிகராக மட்டுமின்றி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியின் தலைவராக இருந்து வந்தார். தற்போது எதிர்பாராத விதமாக பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துள்ளார்.
பாஜக-வுடன் சேர்ந்துள்ள சரத்குமாருக்கு ராதிகா முழு ஆதரவு தெரிவித்து வருவதுடன், மனைவி ராதிகாவிற்கு சரத்குமாரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் இவர்களின் சொத்து மதிப்பு மற்றும் இருவரும் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி நிலுவை வைத்துள்ளது அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.
இருவரின் சொத்து மதிப்பு
நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு 27 கோடி என்றும், இவர் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி பாக்கி 6 கோடி வைத்துள்ளாராம். மேலும் இவருக்கு கடன் 14 கோடி ரூபாய் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமாருக்கு 29 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், இவர் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி பாக்கி 6 கோடி ரூபாய் உள்ளதாகவும், கடன் மட்டும் 19 கோடி ரூபாய் உள்ளதும் தெரியவந்துள்ளது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |