CSK வீரர் மீது காதலா? உண்மையை போட்டுடைத்த பாக்கியலட்சுமி இனியா
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நேஹா தனது காதலைக் குறித்து பேசியுள்ளார்.
நடிகை நேஹா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். இதில் இனியா கதாபாத்திரத்தில் நடிகை நேஹா நடித்து வருகின்றார்.
கேரளாவைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பள்ளி மாணவியாக சீரியலில் நடித்து வந்த நிலையில், தற்போது கல்லூரி பெண்ணாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நேஹா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரனாவும் காதலித்து வருவதாக பேச்சு எழுந்துள்ளது.
இதற்கு காரணம் என்னவெனில் பதிரனா குறித்து தனது இன்ஸ்டாவில் தொடர்ந்து ஸ்டேட்டஸ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நேஹா உடைத்த உண்மை
இதுகுறித்து பேசிய நேஹா, “எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை. ஒரு முறை படப்பிடிப்பில் இருந்தவர் சிஎஸ்கே போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தான் பதிரனா பற்றி என்னிடம் கூறியதுடன், அவர் இன்ஸ்டாவில் பதிவு வைத்திருந்ததை நானும் ஸ்டோரியாக பதிவிட்டதாக கூறியுள்ளார்.
தற்போது அவரை நான் காதலிக்கிறேன் என்று வெளியான வதந்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை நான் நேரில் கூட பார்த்ததில்லை.
ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருமுறை காதல் தோல்வியை சந்தித்தேன். அப்பொழுது கண்ணீர்விட்டு அழுதேன் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |