அம்பானியின் மருமகள் அணிந்திருந்த ஆடம்பரமான ஆடை! இதற்குள் இவ்வளவு ரகசியமா?
முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்சண்ட் அணிந்திருந்த ஆடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அம்பானியின் மருமகள்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரன் மெர்சண்டின் மகள் ராதிகா மெர்சண்ட்க்கும் வரும் 12ம் தேதி மும்மையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு யைத்தில் திருமணம் நடைபெற இருக்கின்றது.
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், முந்தைய கொண்டாட்டம் நடுக்கடலில் ஒரு பயணக் கப்பலில் நடைபெற்றது.
இதற்கு முந்தையை கொண்டாட்டம் ஜாம்நகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தற்போது திருமண தேதி நெருங்கி வரும் நிலையில், சில சம்பிரதாயங்கள் செய்யப்பட்டுள்ளது.
நேற்று குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான மாமேரு சடங்கானது (Mameru ceremony) நடைபெற்றது.
குறித்த சடங்கானது மணமகளை அவரது தாய் மாமன் சீர்வரிசையுடன் சந்தித்து, பாரம்பரிய ஆடைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதாகும்.
ஆடையில் இருக்கும் ரகசியம்
தற்போது முகேஷ் அம்பானியின் புதிய மருமகள் அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிகழ்விற்காக ராதிகா Lehenga அணிந்திருந்தார், மேலும் அதில் துர்கா வசனம் எழுதப்பட்டு பனாரசி துணியால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மிக நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்டு, Bandhani Lehenga என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட துணி வடிவமைப்பு பந்தனி வடிவத்தைக் கொண்டுள்ளது.
குறித்த ஆடையானது தங்க கம்பியைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |