அம்பானியின் மருமகள் என்ன படிச்சிருக்காங்கனு தெரியுமா?
முகேஷ் அம்பானியின் புதிய மருமகளான ராதிகா மெர்சண்ட் படிப்பு குறித்த தகவல் வைரலாகி வருகின்றது.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடுகள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
திருமணத்திற்கு முந்தைய இரண்டு நிகழ்வுகள் ஆடம்பரமாக நடந்து முடிந்த நிலையில், இவர்களின் திருமணம் வரும் 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ட் சென்ட்ரில் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து 13ம் தேதி சுப ஆசிர்வாத நிகழ்வும், 14ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றது.
ஆனந்த் அம்பானியின் கல்வித் தகுதி
ரிலையன்ஸ் குழுமத்தின் வாரிசுகளில் ஒருவரான ஆனந்த் அம்பானிக்கு, ஆகாஷ் அம்பானி என்ற கூத்த சகோதரனும், ஈஷா அம்பானி என்ற சகோதரியும் இருக்கின்றனர்.
ஆனந்த் அம்பானி மும்பையில் இருக்கக்கூடிய திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பள்ளிப் படிப்பினை முடித்துள்ளார். பின்பு அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழகத்திற்கு தொழில் மேலாண்மை பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.
ராதிகா மெர்சண்ட் கல்வித்தகுதி
ஆனந்த் அம்பானியின் காதல் மனைவியான ராதிகா மெர்சண்ட் மும்பையில் உள்ள டிடி சோமானி இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
பின்பு மேற்படிப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பினை முடித்துள்ளார்.
பின்பு இந்தியா திரும்பிய இவர் தனது தந்தையின் என்கோர் ஹெல்த் கேர் நிறுவனத்தின் வாரிய குழு உறுப்பினராக இணைந்து செயல்பட்டு வருகிறார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இருவருமே தங்களது மேற்படிப்பினை அமெரிக்காவில் முடித்தவர்கள் என்பதால், இவர்களின் திருமணத்திற்கு முந்தைய இரண்டு நிகழ்வுகளிலும், பிரவுன் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |