2 லட்சத்திற்கு ஹேண்ட் பேக்... கணவர் கூறிய ஒற்றை வார்த்தை! ஆடிப்போன தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் விதவிதமான பொருட்களை வாங்கிக் குவிப்பவர்கள் மற்றும் அதனை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் அரங்கத்தில் பேசியுள்ளனர்.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் விதவிதமான பொருட்களை வாங்கிக் குவிப்பவர்கள் மற்றும் அதனை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் அரங்கத்தில் அமர்ந்திருந்த மனைவிமார்கள் கூறிய ஒவ்வொரு விடயமும் தொகுப்பாளரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெண் ஒருவர் 2 லட்சம் ரூபாய் கொடுத்து ஹேண்ட் பேக் வாங்கியுள்ளார். மற்றொருவர் தனது கணவர் வருமானம் 20 ஆயிரம் ஆனால் அவர்களின் செலவு 26 ஆயிரத்திற்கு மேல் உள்ளது.
இதனைக் கூறிய கணவரிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியதற்கு, தனது குழந்தை, மனைவி எந்தவொரு கஷ்டப்படக்கூடாது என்று கூறி அரங்கத்தையே நிசப்தத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |