நடுரோட்டில் ராதிகாவிடம் காலில் விழுந்து கெஞ்சும் கோபி! அவமானத்தில் தலைகுனியும் அவலம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவிடம் கெஞ்சும் காட்சி வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வந்தார் இனியா.
ஆனால் இனியா அங்கு பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்று கடைசியில் மருத்துவமனை வரை சென்று வந்ததுடன், இறுதியில் தனது தாயுடன் பாக்கியா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த சோகத்தினை தாங்கிக்கொள்ள முடியாத கோபி இரவில் குடித்துவிட்டு, போதையில் சாலையில் விழுந்து கிடந்தவரை பாக்கியா வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.
தற்போது காலையில் போதை தெளிந்த கோபியிடம், ராதிகா சண்டையிட்டு வீட்டிலிருந்து கிளம்புகின்றார். வெளியேறிய ராதிகாவிடம் கோபி பாவமாக கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.