சரி டீ.. தங்கம்! சிறையில் ரக்ஷிதாவை கொஞ்சிய ராபர்ட் மாஸ்டர்
கடந்த வார டாஸ்கில் சிறைக்குள் சென்ற ரக்ஷிதாவை ராபர்ட் மாஸ்டர் கொஞ்சும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
விறுவிறுப்பாகும் பிக்பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீசன் 6ல் ஜி.பி.முத்து, அசீம், ஷிவின் கணேசன், ராபர்ட் மாஸ்டர், நடிகை மைனா, நடிகை ரக்ஷிதா என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் ஜிபி முத்து முதலில் தானாகவே வெளியேற, தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, செரீனா, மகேஷ்வரி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான போட்டியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிக்பாஸ்ம் அதற்கு ஏற்ப டாஸ்க்குகள் வழங்க, சண்டை வெடித்துள்ளது.
அரண்மனையாக மாறிய வீடு
இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறியது, இதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரக்ஷிதா, படைத்தளபதியாக அசீம், ராஜகுருவாக விக்ரமன், இளவரசராக மணிகண்டன், இளவரசியாக ஜனனி மாறினர்.
மற்றவர்களுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் வழங்கப்பட்டது.
வெடித்த பிரச்சனை
உணவில் உப்பு இருந்ததாக ராணி புகார் அளிக்க, அசீமுக்கும், விக்ரமனுக்கும் சண்டை வெடித்தது, இதில் ராஜாவுக்கு தெரியாமல் பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்க் ஒன்றை வழங்கினார்.
இதைப்பற்றி கடைசியாக பிக்பாஸ் அறிவித்ததும் ரக்ஷிதா, தன்னை ஏமாற்றி விட்டதாக ராபர்ட் மாஸ்டர் கதறி அழுதார்.
இது வெறும் டாஸ்க் தான் என கூறியும், “என்னை ஏமாற்றிவிட்டாய், முதுகில் குத்திவிட்டாய்” என ராபர்ட் மாஸ்டர் கூற ரக்ஷிதாவும் அழ தொடங்கினார்.
சிறையில் ராபர்ட், ரக்ஷிதா
ஒருவழியாக டாஸ்கின் இறுதியில் மோசமாக விளையாடிய நபர்களாக ராபர்ட், ரக்ஷிதா தெரிவு செய்யப்பட்டு சிறைக்குள் அனுப்பப்பட்டனர்.
அங்கு ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்ட விதம் குறித்து ரக்ஷிதா பேசிக்கொண்டே அழத் தொடங்கினார்.
அவரை சமாதானம் செய்த ராபர்ட் மாஸ்டர், சரி விடு, நான் அழுதுவிட்டேன், நீ ஏன் அழுகுற, இது வெறும் டாஸ்க் தான் என்பது எனக்கு புரிகிறது, ஆனால் நீ செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. உன்னை எனக்கு பிடிக்கும் என கூறினார்.
தொடர்ந்து, சரி டீ .. என் பட்டு.. தங்கம்.. மூக்குத்தி என கொஞ்சினார்.. கமல் சார் சிறையில் இருப்பதை கேட்பார் பார்.. எனக்கூறி தேற்றினார்.