மோசமான முறையில் விளையாட வேண்டாம் Bully Gang... வைரலாகும் ரக்ஷிதாவின் ஆவேச பதிவு
பூர்ணிமா மற்றும் மாயாவை கடுமையான சாடி வைல்ட் கார்டு போட்டியாளர் தினேஷின் முன்னாள் மனைவி ரக்ஷிதா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
பிக்பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
பிக் பாஸ் இல்லத்திற்குள் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதற்கு முக்கிய காரணம் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ கேங்க்தான் என ரசிகர்களும், பிக் பாஸ் போட்டியாளர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
[D8585Q ]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை அதிக அளவில் போட்டியாளர்கள் களமிறங்கினர். பிக் மற்றும் ஸ்மால் என்று இரண்டு வீடுகளில் மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் பாவா செல்லதுரை தாமாக முன்வந்து வெளியேறிய நிலையில், பலராலும் விரும்பபட்ட நடிகர் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
வைல்ட் கார்டு போட்டியாளராக தினேஷ் களமிறங்கியுள்ள நிலையில் அவரையும் மாயா மற்றும் பூர்ணிமா டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது. அண்மையில் மாயா மற்றும் பூர்ணிமா பேசுவது போல வெளியான ஒரு காணொளியில், அவர்கள் தினேஷை டார்கெட் செய்வது போல பேசியுள்ளனர்.
மேலும் அவருடைய முன்னாள் மனைவியும், நடிகையுமான ரக்ஷிதாவுடன் தினேஷ் பற்றி பேசவேண்டும் என்று அந்த காணொளியில் அவர்கள் பேசுவது போல அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தினேஷை, ரக்ஷிதா திருமணம் செய்த நிலையில் ஒரு சில வருடங்களில் அவர்கள் பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னை பற்றி அவர்கள் இருவரும் பேசவேண்டிய அவசியம் என்ன, நான் ஏற்கனவே வாழ்க்கையில் பல துயரங்களை அனுபவித்து வருகின்றேன் என்று கூறி பேசியுள்ளார் அவர். இது குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கடும் ஆவேசமாக பூர்ணிமா மற்றும் மாயாவை கடுமையாக சாடியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |