பாத்ரூம் செல்ல நினைத்தது குற்றமா? ஜி.பி.முத்துவின் பரிதாப நிலை
பிக்பாஸ் வீட்டிற்குள் நான்கு அணிகலாக பிரிந்திருக்கும் போட்டியாளர்கள் அரங்கேற்றும் கொமடி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை 20 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிலையில், பல தெரியாத முகங்களும் உள்ளே சென்றுள்ளனர்.
இதில் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் ஜி.பி.முத்து கொமடி வேற லெவல் என்று தான் கூற வேண்டும். நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து, கமல்ஹாசன் முன்பு வந்து நின்றதோடு, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தருணம் என அனைத்தும் ரசிக்கும்படியாக அசத்தினார்.
இந்நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் 4 அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில், சமையல் அறையில் வேலை செய்பவர்கள் மற்றவர்களுக்கு ஊட்டிவிடவும், பாத்ரூம் சுத்தம் செய்பவர்கள், பாத்ரூம் செல்ல நினைப்பவர்களை சிகப்பு கம்பளம் விரித்து அழைத்து சென்று டாஸ்க்கை செய்து வருகின்றனர்.
