ரவுடி பேபிய இப்படி அழ வைச்சிட்டாங்களே? ரக்ஷிதா போட்ட கூச்சல்! அனல்பறக்கும் பிக்பாஸ் வீடு
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், போட்டியாளர்களின் சுயரூபம் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை 20 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிலையில், பல தெரியாத முகங்களும் உள்ளே சென்றுள்ளனர்.
இதில் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் ஜி.பி.முத்து கொமடி வேற லெவல் என்று தான் கூற வேண்டும். தற்போது மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் ரவுடி பேபி ஆயிஷா மற்றும் அசல் கோலார் நேருக்கு நேராக பேசிய போது, அசல், ஆயிஷாவிடம் வாடா போடா என்று கூப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். இதில் கஷ்டப்பட்ட ஆயிஷா அவரிடம் சரி என்று கூறிவிட்டு வெளியே தனியாக இருந்து அழுகின்றார்.
மற்றொரு அன்சீன் ப்ரொமோ காட்சியில் குழுவாக பிரிந்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், அனைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ரஷ்சிதா பயங்கரமாக கத்தி கூச்சல் போட்டுள்ளார்.