மதுபானக் கடையைச் சூறையாடி ரக்கூன்- பார்த்ததும் பதறிய உரிமையாளர்
அமெரிக்காவில் ரக்கூன் மதுபானக் கடைக்குள் நுழைந்து அலப்பறை செய்ததாகவும் உரிமையாளர் இது குறித்து வறுத்தம் தெரிவித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்கா- வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மதுபான கடையொன்றில் ரக்கூன் நுழைந்துள்ளது.
அது அங்கு என்ன செய்வது என தெரியாமல் மதுபான போத்தல்களை உடைத்து, அதிலுள்ள மதுபானங்களையும் அருந்தியுள்ளது.
போதையில் குழப்பமான சூழ்நிலைக்கு சென்ற ரக்கூன் அங்கும் இங்கும் சென்று கடையை சேதப்படுத்தி விட்டு, கழிவறையில் கிடந்துள்ளது. கடந்த நவம்பர் 28-ம் தேதி பிளாக் ஃபிரைடே (Black Friday) அன்று, கடையை திறப்பதற்காக ஊழியர் ஒருவர் வந்த பொழுது ரக்கூன் மது போதையில் அட்டகாசம் செய்தது தெரியவந்துள்ளது.

போதையில் மயங்கிய ரக்கூன்
இந்த சம்பவம் குறித்து, ஹனோவர் கவுண்டி விலங்குப் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், ரக்கூன் போதையில் மயங்குவதற்கு முன்னர், உடைந்த பாட்டில்கள், கவிழ்த்த பெட்டிகள் மற்றும் சிதறிய அலமாரிகள் உட்பட பல வேலைகளை பார்க்க முடிந்தது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய உரிமையாளர் சுமார் 14 பாட்டில் மதுபானம், சுமார் 250 அமெரிக்க டாலர்கள் மதிப்புடையவை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |