முயல்களை குறி வைத்திருக்கும் புது வைரஸ் தொற்று.. அடையாளம் காண்பது எப்படி?
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் வாழும் ஒரு வகை முயல்கள், முகத்தில் கொம்பு போன்ற வளரும் ஒரு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வைரஸ் தொற்று
"ஷோப் பாப்பிலோமா" எனப்படும் வைரஸ் தொற்று முயல்களில் முகத்தில் கொம்பு வடிவத்தில் வளர்வதாகவும், அது பார்ப்பதற்கு பெரிய மருக்கள் போன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்த தொற்று குறித்து பயப்பட வேண்டியதில்லை. உடலில் முடி வைத்திருக்கும் விலங்குகள் இந்த தொற்றுக்கள் வருவது சாதாரணமானதாகும்...” மேலும், முயல்கள் ஃபிராங்கன்ஸ்டைன் பனீஸ், பேய் முயல்கள், சோம்பி முயல்கள் உள்ளிட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
அடையாளம் காண்பது எப்படி?
டென்வரின் வடக்கில் 65 மைல்கள் தொலைவில் உள்ள ஃபோர்ட் காலின்ஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றன.
இதுவே முயல்கள் பற்றி பேசப்பட காரணமாகும். அதே போன்று, கொலராடோ பூங்கா மற்றும் வனவிலங்கு துறை பேச்சாளர் காரா வான் ஹூஸ் கூறுகையில், “ஷோப் பாப்பிலோமா வைரஸ் தொற்று தவறுகள் மற்றும் ஈக்களால் பரவுகிறது.
இது முயலிலிருந்து முயலுக்கு பரவும் வாய்ப்பும் உள்ளது. மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கு வர வாய்ப்பு இல்லை.
மேலும், குறித்த தொற்று முயல்களுக்கு முதலில் பருக்கள் போன்று தோன்றி, அதன் பின்னர் நீளமாக வளர்ந்து, பார்ப்பதற்கு கொம்பு போன்று தோற்றமளிக்கும்” என்றும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |