ரஜினியிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்வேன் - ராஷி கன்னா ஓபன் டாக்!
Raashii Khanna Opens Up About Her Bond With Superstar Rajinikanth : ரஜினிகாந்துடன் நடிக்கும் அனுபவம் குறித்து நடிகை ராஷி கன்னா பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ரஜினியுடன் இணையும் ராஷி கன்னா
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்மன்' திரைப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, ஸ்ரீலீலா, ராம் பொதினேனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து ராஷி கன்னா சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

கேள்விகளால் ரஜினியைத் தொந்தரவு செய்வேன்
ரஜினிகாந்துடன் படப்பிடிப்பில் இருக்கும்போது அவரிடம் நிறைய பேசுவதாகவும், அடிக்கடி பல கேள்விகளைக் கேட்டு அவரைத் தொந்தரவு செய்வதாகவும் ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.
ஆனால், தான் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் ரஜினிகாந்த் மிகவும் பொறுமையாகப் பதிலளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தனக்கு ஒரு நல்ல நண்பரைப் போல மாறிவிட்டதாகக் கூறிய ராஷி கன்னா, அவரது அருகில் இருக்கும்போது தன்னை ஒரு குழந்தையைப் போல உணர்வதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.அவரது எளிமையும் அன்பான அணுகுமுறையும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதாகக் குறிப்பிட்ட ராஷி கன்னா, ஒரு ரசிகையாகத் தானும் 'தர்மன்' திரைப்படத்தைத் திரையில் காண ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |