சவுத்ரி மரணம்... கதறி அழுத ஜீவா - நேரில் செல்வாரா விஜய்?
தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி விபத்தில் சிக்கி மரணம் அடைந்த நிலையில் அவரது உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.பி.செளத்ரி
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் தான் ஆர்.பி. சௌத்ரி.
இவர் ராஜஸ்தான் மாநிலம், பேவார் மாவட்டத்தில் உள்ள ஜூன்டா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரின் வயது 76. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜூன்டா கிராமம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
காரை ஓட்டி வந்த கௌதம் சேர்வி படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஜோத்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சௌத்ரி லிலம்பா தனது உறவினர் வீட்டில் திருமண விழா ஒன்றிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய நேரத்தில் சௌத்ரி சென்ற சாலையில் திடீரென மாடுகள் குறுக்கே வந்துள்ளது.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை சுவரில் மோதியதால் விபத்துக்குள்ளாகி சௌத்ரி உயிரிழந்துள்ளார். இவரது இறுதி சடங்கு சென்னையில் நடைபெறுகிறது.
இவர் தயாரிப்பு துறையில் சுமார் 40 ஆண்டுகாலமாக இருத்திருக்கிறார். இவர் கடைசியாக இயற்றிய படம் 'மாரீசன்'. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நேரில் செலர்வாரா விஜய்?
தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி இதுவரை 99 படங்களை தன்னுடைய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். அவரின் 100வது படத்தில் தளபதி விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் .

ஆனால் விஜய் அரசியலுக்குள் நுழைந்ததால் அவரால் சினிமாவில் விஜய்யை நடிக்க வைக்க முடியாமல் போயுள்ளது. இந்த ஆசையுடன் இறந்துள்ளார் ஜீவா அப்பா.
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் ஜீவா தன்னுடைய அப்பா இழந்ததை தாங்க முடியாமல் கதறி அழும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் அரசியல் வட்டாரங்களில் பலர் ஜீவா கஷ்டத்தில் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் அவர் அப்பா இழந்ததை கேலி செய்து போஸ் போட்டு வருகின்றனர்.

ஜீவா, விஜய்யின் தீவிர ரசிகர் மற்றும் தவெக ஆதரவாளர். விஜய்யுடன் சேர்ந்து ஜில்லா படம் மற்றும் நண்பன் படத்திலும் நடித்துள்ளார்.
சௌத்ரியின் ஆசை விஜய்யால் நிறைவேறாமலும் போயுள்ளது. இதனால் தவெக தலைவர் விஜய் அஞசலி செலுத்த நேரில் செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |