அன்று குழந்தை நட்சத்திரம்... இன்றோ IAS அதிகாரி: யார் அந்த நடிகை?
இந்திய திரையுலகை பொறுத்தவரையிலும் தனது சினிமா கனவிற்காக படிப்பை பாதியிலேயே விட்டவர்கள் ஏராளம்,ஒரு சிலர் மருத்துவம், பொறியியல் என பட்டங்கள் பெற்றிருந்தாலும் சினிமாவிற்கு தங்களையே மாற்றிக்கொண்டு சாதனை முத்துக்களாக மிளிர்கின்றனர்.
ஆனால் இந்த பதிவில் படிப்பிற்காக சினிமாவை விட்ட இளம்பெண்ணை பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்திய திரையுலகில் 32 படங்கள், 48 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என பிரபலமாய் வலம்வந்த Keerthana, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஒரே லட்சியத்திற்காக சினிமாவை விட்டுவிட்டார்.
Ganga Yamuna, Karpoorada Gombe, Kanooru Heggadithi, Circle Inspector, Muthina Aliya போன்ற பல கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இதுமட்டுமல்லாது தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார், பிரபல தமிழ் நடிகரான ரமேஷ் அரவிந்துடன் நடித்துள்ளார்.
கீர்த்தனாவுக்கு 15 வயது ஆகும் போது, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தது,
சற்றும்கூட யோசிக்காமல் சினிமாவைவிட்டு தனது படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
கீர்த்தனாவின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது, பெரியதிரைக்காக சின்னத்திரையை விட்டு விலகினாரோ என்றே பலரும் நினைத்தனர்.
ஐஏஎஸ் பரிட்சைக்கு முன்னதாக கர்நாடக அரசின் தேர்வில் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் அரசு அதிகாரியாக பணியாற்றினார்.
ஆனால் தனது கனவை நனவாக்க போராடிக்கொண்டிருந்தார் கீர்த்தனா, அவ்வளவு எளிதாக அது நடந்துவிடவில்லை.
ஐந்து முறை தோல்வியடைந்த பின்னரும், ஆறாவது முறையாக அதாவது 2020ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்.
இறுதியில் கர்நாடகாவின் மாண்டியாவின் உதவி கமிஷனராக பதவியேற்றும் கொண்டார்.
