ராணி எலிசபெத் இறப்பிற்கு காரணம் என்ன? இறுதி சடங்கிற்கு மட்டுமே இத்தனை கோடியா?
இங்கிலாந்து நாட்டில் 70 ஆண்டுகாலம் அரசாட்சி செய்து வந்த ராணி எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி மரணமடைந்தார்.
இதன்பின், வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டது. அதுவும் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கைப் பாதுகாப்பது ஐக்கிய ராஜ்ஜிய வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒற்றை நாள் நடவடிக்கையாகும்.
இதற்காக சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க லாடருக்கும் (இந்திய மதிப்பில் ரூ. 59 கோடி) அதிகமாக செலவாகும் என தெரிகிறது.

Getty Images
இறந்தது எதனால்?
மகாராணி எலிசபெத் எலும்பு தொடர்பான பிரச்சனையால் உயிரிழந்தார் என அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் Lady Colin Campbell தெரிவித்துள்ளார்.
இவர், மகாராணி உயிரிந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னரே அவர் இறந்துவிட்டார் என Campbell வீடியோ வெளியிட்டிருந்தார்,